திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசி கிராம மக்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு இரவில் காதலியை சந்திக்க சென்றவரை போலீசார் கைது செய்தனர். அழகர் பொட்டலில் உள்ள மாங்காய் குடோன் கடந்த 23ஆம் தேதி இரவு தீப்பற்றி எரிந்தது.
விசாரணை நடத்திய போலீசார் அதே பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் பெட்ரோல் நிலையத்தில் இருந்து எரிபொருளை வாங்கி சென்று குடோன் மீது வீசியதை சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்தனர். ராஜாங்கம் என்பவருக்கு திருமணமான பெண் ஒருவருக்கும் நெருக்கமான பழக்கம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இரவில் அப்பெண்ணை சந்திக்க சென்ற போது தெருவில் ஆட்கள் இருந்ததால் அவர்களது கவனத்தை திசை திருப்புவதற்காக குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. காதலியை சந்திப்பதற்காக வினோத முயற்சியை முன்னெடுத்த ராஜாங்கத்தை போலீசார் கைது செய்தனர்.