முதன்முதலில் கண்டறியப்பட்ட கலர் கலர்…. வானவில் பாம்பு
அமெரிக்காவின் ஃப்ளோரிடா காடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அரியவகை வானவில் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் ஓர்லெண்டாவிற்கு வடக்கே 47 மைல் தொலைவில் உள்ள உட்கார வனப்பகுதியில் ட்ரெஸ்ஸிங் கவுண்ட் என்பவர் நடைபயணம் மேற்கொண்ட போது வண்ணமயமான 4 அடி நீள வானவில் பாம்பை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் நீர்வாழ் தாவரங்களில் மறைந்து வாழும் இந்த வானவில் பாம்புகள் தீங்கு விளைவிக்காது என்றும் எப்போதாவது அரிதாக நிலப்பரப்பிற்கு வருவதாகவும் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




