நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கான மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற என்ன வழி என்று விழிபிதுங்கி கொண்டிருக்கிறது சீன அரசு. போக்குவரத்து முடக்கம் முதல் ஒட்டுமொத்த நகரத்திற்கு சீல் வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஒருபுறம் எடுத்துக் கொண்டிருக்கிறது அரசு.
ஆனால் தற்போது வரை கொரோனாவின் கொடூர தாண்டவம் அடங்கிய பாடில்லை. 6 நாட்களில் ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை கட்டிய சீனா அங்கு வரும் நோயாளிகளுக்கு என்ன மருந்தை கொடுத்தால் கொரோனாவை கொல்லலாம் என்று கண்டறிய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளும் இந்த கொரோனாவை அழிக்கும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தங்கள் நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களை தொடர்ந்து ஈடுபடுத்தி வருகின்றனர்.
அதேசமயம் சீனாவும் பல்லாயிரம் ஆராய்ச்சியாளர்களையும் ஒருபுறம் முடுக்கியுள்ளது. அதன் முக்கிய அம்சமாக ஒரு கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனது நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய மருந்தை கொடுத்து பார்த்து குணமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா உருவான மருத்துவமனைகளில் இந்த பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மேற்கத்திய மருந்துகளை ஒருங்கிணைத்து சிகிச்சை அளித்து வருகிறது.
இதனை உபெயின் புதிய சுகாதார ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வாகேஷன் உறுதிப்படுத்தியுள்ளார். உபெயின் கொரோனா உறுதி செய்யப்பட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த பாரம்பரிய சீன மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக நாட்டிலேயே தலைசிறந்த சுமார் 2,200 சீன பாரம்பரிய மருத்துவ
சிகிச்சை நிபுணர்கள் உபேக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஏற்கனவே சீனாவில் 1600 பேரின் உயிரை பலி வாங்கியதோடு சுமார் 66 ஆயிரத்து 500 பேரை பாதித்திருக்கும் இந்த கொரோனா வைரசுக்கு எதிராக இதுவரை எந்த மருந்துகளும், தடுப்பு களும் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பாரம்பரியத்தை போன்றே சீனாவின் பாரம்பரியமான மருத்துவ தற்காப்பு கலையில் பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் நிறைந்தவை.
எனவே அந்த பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்தியாவது உலகை அச்சுறுத்தும் கொரோனாவை எப்படியாவது கட்டுப்படுத்தி விடலாம் என்று தற்பொழுது பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆயுதமாக கையில் எடுத்துள்ளது சீன அரசு.