நாட்டுப் பற்றை போற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்..!

இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி இளைஞரொருவர் கம்பத்தின் மீது ஏறி மூவர்ணக்கொடி ஆக பரந்த நெகிழ்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

 

தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு குடியரசு தினத்தையொட்டி நேற்று பதிவிட்டு இருக்க வேண்டும் என்றும் அதேசமயம் ஊக்கமளிக்கும் வீடியோவை பார்ப்பதில் காலதாமதம் பொருட்டு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வீடியோவில் மூவர்ணக்கொடி உடையணிந்த மாற்றுத்திறனாளி கலைஞர் கம்பத்தின் மீது ஏறி அதன் உச்சியில் பக்கவாட்டில் உடலை விரித்து திடமாக நிற்கும் காட்சி மெய் சிலிர்க்க வைப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Leave a Reply