மகாராஷ்டிராவில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம்!

குடியரசு நாளை முன்னிட்டு மகாராஷ்டிராவில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிவ போஜனம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பத்து ரூபாய்க்கு சாதம், பருப்பு, காய்கறி மற்றும் 2 சப்பாத்திகள் வழங்கப்படுகின்றன.

 

முதற்கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் மருத்துவமனைகள் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், சந்தைகள் ஆகியவற்றில் உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

 

ஒரு உணவகத்தில் 500 பேருக்கு உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை உணவுகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த மூன்று மாதங்களுக்கு 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.


Leave a Reply