ஆந்திராவின் தலைநகர் எது?- 20ஆம் தேதி அறிவிக்க முடிவு

ஆந்திரா தலைநகர் எங்கிருந்து செயல்படும் என்று வரும் 20-ஆம் தேதி தொடங்கும் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து குண்டூர் மாவட்டத்தில் உயர்மட்ட கமிட்டியினருடன் நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

தலைநகரம் எங்கு அமைப்பது அமராவதி தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் சத்யநாராயணா தலைநகரில் இருந்து செயல்படும், எப்போது செயல்படும் என்பது குறித்து 20ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றார்.


Leave a Reply