ராஜ்கோட் ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங்: தவான், ரோகித் விளாசல்

ராஜ்கோட்டில் நடைபெறும் ஆஸி.,க்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்க ஜோடியான தவான்- ரோகித் சர்மா ஜோடி அதிரடியாக விளாச இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது.

 

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த தொடரை தக்க வைக்க, ராஜ்கோட்டில் நடைபெறும் இன்றைய 2-வது போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இந்தியா உள்ளது. டாஸ் வென்ற ஆஸி., கேப்டன் ஆரோன் பிஞ்ச் இந்த முறையும் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

இதனால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவரில் 81 ரன்கள் சேர்த்த நிலையில் 42 ரன்களில் ரோகித் அவுட்டானார். தற்போது தவானுடன் கேப்டன் கோஹ்லி ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்களுடன் ஆடி வருகிறது. தவான் 48 ரன்களுடனும், கோஹ்லி 20 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

 

இந்திய அணியில் காயம் காரணமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக மணிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டு லோகேஷ் ராகுல் கீப்பிங் செய்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஷர்குல் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் இடம் பெற்றுள்ளார்.


Leave a Reply