பாகிஸ்தானில் தொழுகையின் போது மசூதியில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி காவல்துறை உயர் அதிகாரி உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான கோட்டா நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று திடீரென வெடித்து சிதறியது.

 

இந்த குண்டுவெடிப்பில் நகர காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 14 பேர் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் நடந்த இரண்டாவது குண்டு வெடிப்பு இது என்றும் துணை ராணுவ படையினர் அந்த இடத்தை சுற்றி தேடுதல் பணியை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


Leave a Reply