தமிழகத்தில் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சிவகங்கை தவிர 26 மாவட்டங்களில் மறைமுக தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அதிமுக14, திமுக 12 இடங்களை கைப்பற்றி உள்ளன.
அதிமுக வென்ற மாவட்டங்கள் :
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை , விருதுநகர், தூத்துக்குடி, குமரி,தர்மபுரியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
திமுக வென்ற மாவட்டங்கள் : திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, நீலகிரியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் ஒருவர் கடத்தப்பட்ட புகாரால் அங்கு மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை. இங்கு மொத்தம் 16 உள்ள இடங்களில் அதிமுகவும் திமுகவும் தலா 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் இங்கு இழுபறி நிலவுவது குறிப்பிபத்தக்கது.
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 27 மாவட்டங்களில் திமுகவும், அதிமுகவும் தலா 13 மாவட்டங்களில் பெரும்பான்மை பெற்றிருந்தன.
இதனால் இரு கட்சிகளுமே தலா 13 மாவட்ட கவுன்சில் தலைவர் பதவிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுக்கோட்டையில் முடிவு தலைகீழாக மாறிவிட்டது.
இங்கு மொத்தமுள்ள 22 மாவட்ட கவுன்சில் இடங்களில் திமுக 13, அதிமுக 9 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தன. இதனால் திமுகதான் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று நடந்த தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் கட்சி மாறி ஓட்டுப் போட்டதால் அந்த மாவட்ட கவுன்சில் தலைவர் பதவியை அதிமுகவிடம் பறிகொடுத்து, திமுக ஏமாந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






