ம.பி.யில் அரசு மருத்துவர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா

பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்பட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

 

மேலும் 2300 மருத்துவ பேராசிரியர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜினாமா முடிவை அறிவித்துள்ள மருத்துவப் பேராசிரியர்கள் வரும் 9ஆம் தேதி முதல் பணிக்கு வர போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

 

இதனால் 13 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இந்நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இதில் காந்தி மருத்துவக் கல்லூரியுடன் இயங்கி வரும் மருத்துவமனையில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 3500 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply