நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

சென்னையில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட காவல்துறை தடை விதித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

அதன்படி இரவு ஒரு மணிக்கு மேல் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்த கூடாது என்றும், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நட்சத்திர விடுதிகளுக்கு வரக்கூடியவர்களை சிசிடிவி கேமராக்கள் வாயிலாக கண்காணிக்க வேண்டும் என்றும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.


Leave a Reply