இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கும் மோடி,அமித்ஷா

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

 

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதாரத்திற்கு இழைக்கப்பட்ட சேதம் ஆகியவற்றால் இளைஞர்களுக்கு ஏற்பட்ட கோபத்தை மோடியும், அமித் ஷாவும் எதிர்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால்தான் அவர்கள் நமது அன்பை பிரிப்பது உடன் வெறுப்பினை பரப்புகிறார்கள் எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அன்போடு பதில் அளிப்பதன் மூலமே அவர்களை நாம் தோற்கடிக்க முடியும் என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply