யூடியூப் மூலம் 26 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் 8 வயது சிறுவன் ரியான்

8 வயதான சிறுவன் ரியான் நடப்பாண்டு யூடியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி சர்வதேச அளவில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

 

ஆரம்பத்தில் ரியாஸ் ரெவின்யூ என்ற பெயரில் இயங்கிய சேனல் தற்போது ரியான்ஸ் வேர்ல்டு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. புதிய பொம்மைகளை அறிமுகம் செய்து ரியான் விளையாடும் வீடியோக்கள் அந்த சேனலில் வெளியிடப்படுகின்றன.

 

2015ஆம் ஆண்டு அவரது பெற்றோரால் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் அந்த சேனலுக்கு இரண்டு கோடியே 29 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். பல வீடியோக்கள் 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன.

 

டியூட் பர்ஃபெக்ட் என்ற யூடியூப் சேனல் 20 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்திலும், ரஷ்யாவை சேர்ந்த 5 வயது சிறுமியின் சேனல் 18 மில்லியன் டாலர் வருமானத்தில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.


Leave a Reply