--- --:--:-- --

எனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் – உலகப் புகழ் பெற்ற கோடீஸ்வரர் நெகிழ்ச்சி.!

13

உலகப்புகழ் பெற்ற கோடீஸ்வரர் வெர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் தலைவருமான ரிச்சர்ட் பிரான்சன் தனது மூதாதையர்கள் தமிழகத்தில் கடலூரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

 

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தனது எள்ளுபாட்டியின் தாயின் பெயர் ஆர்யா என்றும் அவர் கடலூரைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆய்வகத்தில் அறிவியல்ரீதியான சோதனைகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

தங்கள் நிறுவன விமானங்களில் அடையாளச் சின்னமாக ஒரு பெண் படம் இருப்பதாகவும் அதற்கு ஆர்யா என பெயரிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியர்கள் எவரைப் பார்த்தாலும் அவர் தனது உறவினராக இருக்குமோ எனத் தோன்றும் என்றும் பிரான்சன் குறிப்பிட்டார்.

 

இதற்கிடையே மும்பை புனே இடையிலான அதிநவீன பைபர் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon