குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையை மறைக்கவே தன்மீது பாரதிய ஜனதா கவனத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேக் இன் இந்தியா என்று பிரதமர் கூறும் நிலையில் பெண்கள் பாலியல் வன்கொடுமை தான் நடக்கிறது என்று கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க போவதில்லை என்று தெரிவித்தார்.
டெல்லி பாலியல் வன்கொடுமையின் தலைநகரம் என்று பிரதமர் மோடி பேசிய வீடியோ தனது செல்போனில் இருப்பதாக கூறிய அவர் அதை அனைவரும் காண டுவிட்டரில் பகிர போவதாகவும் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையில் இருந்து மக்களை திசை திருப்பவே பாரதிய ஜனதா இதே பிரச்சினை இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.