--- --:--:-- --

ரஜினி இல்லத்தில் திரண்ட ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்

7

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்கு வருகை தந்த ரசிகர்களுக்கு லதா ரஜினிகாந்த் இனிப்புகளை வழங்கினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் திரண்ட ரசிகர்களை ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்தார்.

 

அப்போது ரஜினி சார்பாக அவர்களுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். ரஜினி நலமாக இருக்க பிரார்த்தனை செய்து பிரசாதம் அனுப்பியவர்களுக்கும் நன்றி என அவர் தெரிவித்தார். முன்னதாக பிறந்த நாளன்று போயஸ்கார்டன் இல்லத்தில் இருக்க மாட்டேன் என ரஜினி கூறியிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எழுபதாவது வயதில் அடி எடுத்து வைக்கும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் உடல் நலத்துடனும், வளத்துடனும் ரஜினிகாந்த் மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்துவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதேபோல நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் ரஜினிக்கு ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon