மார்க்கெட்டில் வெங்காயம் திருடியவருக்கு அடி உதை

புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் இரவு நேரத்தில் வெங்காயத்தை திருடியவரை வியாபாரிகள் அடித்து உதைத்தனர். பிரசித்திபெற்ற குபேர் மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெறுகிறது.

 

இன்று அதிகாலை வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான கடையில் வைக்கப்பட்டிருந்த பூண்டு, வெங்காயம், மிளகாய் மூட்டை போன்றவை திருடு போயின.

 

இதனை கண்காணித்த வியாபாரிகள் சந்தேகத்திற்கிடமான வகையில் வெங்காயம் உள்ளிட்ட மூட்டைகளை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்ற நபரை பிடித்து விசாரித்த போது, அவர் வெங்காயம் மூட்டையை திருடியது தெரியவந்தது. அவரை கட்டி வைத்து உதைத்த வியாபாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Leave a Reply