சென்னை ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக படிகட்டுகளில் தானியங்கி இருக்கை

சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் மாற்றுதிறனாளிகளின் வசதிக்காக படிக்கட்டுகளில் தானியங்கி இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் எளிமையான முறையில் சேவை பெற வீல் சேர்கள், மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

 

இதன் ஒரு பகுதியாக படிகளில் ஏற சிரமப்படும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்காக தானியங்கி இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 150 கிலோ எடை வரை தாங்கக்கூடிய இந்த தானியங்கி இருக்கை தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.


Leave a Reply