ஆளுமை மிக்க தலைவர் வைகோ மட்டுமே: செல்லூர் ராஜு பாராட்டு

தமிழகத்தின் ஆளுமைமிக்க அரசியல் தலைவர் வைகோ மட்டுமே என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இல்லை என்றும், அதன் காரணமாகவே அக்கட்சி பல்வேறு வழக்குகளை போட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

 

ஸ்டாலினை நம்பி வாக்கு கேட்க முடியாத நிலையில் அந்த கட்சியை நிர்வாகிகளும், தொண்டர்களும் உள்ளதாக தெரிவித்த செல்லூர் ராஜூ காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த கதி கருணாநிதிக்குப் பிறகு திமுகவிற்கு நேர்ந்துள்ளதாக கூறினார்.

தமிழகத்தின் ஆளுமை மிக்க அரசியல்வாதி வைகோ தான் என குறிப்பிட்ட செல்லூர் ராஜு ஆனால் தற்போது அவரும் முக ஸ்டாலினின் ஊதுகுழலாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.


Leave a Reply