பீஹாரில் ஜவுளி வியாபாரி ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்ற காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. பாட்னாவில் உள்ள பிரபல ஜவுளிக் கடையின் உரிமையாளரும், அவரது பணியாளரும் அன்றாட வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரு இளைஞர்கள் திடீரென கடைக்குள் நுழைந்து உரிமையாளரை கண்ணிமைக்கும் நொடியில் சுட்டனர். கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து இருந்த பணியாளியை துப்பாக்கியில் மிரட்டி விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு பாட்னா காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்