மக்களவையில் சீனா ஊடுருவல் தொடர்பான விவாதத்தின்போது ராகுல் தூக்கம்?

மக்களவையில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தூங்கியது போன்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனாவால் எல்லையில் நிகழும் அச்சுறுத்தல் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது.

 

இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ரஞ்சன் சவுத்ரி அண்டை நாடுகளால் விடப்படும் அச்சுறுத்தல் மற்றும் ஊடுருவல் தொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல்காந்தி கண்ணத்தில் கைவைத்தபடி கண்ணை மூடிக் கொண்டிருந்தார்.

 

இந்த வீடியோ காட்சி வெளியாகி விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மக்களவை நடவடிக்கையின்போது ராகுல்காந்தி இவ்வாறு செயல்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2014ஆம் ஆண்டு பட்டியல் இனத்தவருக்கு எதிரான கொடுமைகள் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ராகுல்காந்தி தூங்கியது போன்ற காட்சிகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply