கரூர் அருகே துணை மின் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
புகழுரில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து புகலூர், வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் புகழ் ஊரில் உள்ள மின்மாற்றி ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் மின்மாற்றியில் இருந்த எண்ணெய் கொட்டி தீப்பிடித்து எரிந்து வந்தது.
தீ கொழுந்து விட்டு எரிந்த வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்து குறித்து அறிந்து அருகிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலை தீயணைப்பு வாகனம் மற்றும் கரூர் வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து 3 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.