--- --:--:-- --

தனியார் நிறுவனத்தின் குளுக்கோஸ் பாட்டிலில் விஷம்!

9

உடல் சோர்வை போக்க குளுக்கோஸ் சாப்பிட்ட ஒருவர் கவலைக்கிடமான நிலைக்கு ஆளாகியுள்ளார். குளுக்கோஸ் விற்பனை செய்த தனியார் நிறுவனம் மீது அதிரடியான குற்றச்சாட்டுக்களையும் அவர் சுமத்தியுள்ளார். சென்னை வியாசர்பாடி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்.

 

திருமணமான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரியாணி மாஸ்டராக தொழில் செய்யும் ஜாகிர் உசேன் தனியார் நிறுவனத்தில் குளுகோஸை சாப்பிட்ட நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுள்ளார்.

 

வியாசர்பாடி பிபி காலனியில் சமையல் வேலை முடிந்ததும் வீடு திரும்பிய சாகிர் உசேன் களைப்பாக இருந்ததால் அம்பேத்கர் கல்லூரி சாலை கல்லுகடை பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் பிரபல நிறுவனத்தின் குளுக்கோஸ் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

காலாவதி ஆகவில்லை என்பதற்கான தேதி குறிப்பிடப்பட்ட 200 மில்லி அளவு கொண்ட மூன்று குளுக்கோஸ் பாக்கெட்டுகளை வாங்கிய ஜாகிர் உசேன் இரண்டு பாக்கெட்டுகளில் உள்ள குளுக்கோஸை சாப்பிட்டுள்ளார். ஒரு பாக்கெட்டை எடுத்து சென்று அதை குழந்தைகளுக்கு கொடுக்க நினைத்த போது குளுக்கோஸ் கெட்டுபோயிருந்தது தெரிய வந்துள்ளது.

 

ஆனால் அந்த பாக்கெட்டிலும் காலாவதி ஆகவில்லை என்பதற்கான தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கிடையே குளுக்கோஸ் சாப்பிட்ட சாகிர் உசேன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் சாகிர் உசேன் அளித்த புகாரின்படி வியாசர்பாடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வழக்கை வாபஸ் பெறும்படி சாதனை சிலர் மிரட்டியதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon