மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடைசியில் இந்த மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.கார்த்திகை மாதம் என்பதால், சில நாட்களாகவே கர்நாடக, ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு வெடிக்கும் என இ-மெயிலில் மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் கோவில் வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
கோவிலுக்கு வந்த பக்தர்களும், தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கோவில் வளாகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தியும், சந்தேகப்படும்படி எதுவும் சிக்காத நிலையில் , வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. மேர்ப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது.