சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி தீட்சிதர் கொடுத்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 16ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சந்நிதியில் அர்ச்சனை செய்யக்கோரிய பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கோவிலை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டும் என அந்தப் பெண் தகராறு செய்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னை நோக்கி கையை தூக்கியதால் தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு போட்டு இருப்பதாகவும் தீட்சிதர் தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முன்ஜாமீன் மனுவை அவர் வாபஸ் பெறப்பட்டதுயடுத்து மனுவை தள்ளுபடி செய்ததாக நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.