பாம்பைக் கடித்து கொன்று எஜமானரை காப்பாற்றிய நாய்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டிற்குள் புகுந்த பாம்பை கடித்து கொன்ற செல்ல பிராணி எஜமானரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சோழமாதேவி அம்பேத்கர் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் பெருமாள், அவரது மனைவி, மகன் ஆகியோர் கொல்லைப் புறத்தில் இருந்த நிலையில் மகள் மட்டுமே வீட்டிற்குள் இருந்தார்.

 

அப்போது திடீரென 6 அடி நீள பாம்பு புகுந்ததால் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த வளர்ப்பு நாய் சட்டென பாம்பை கடித்து குதறியது.

 

நாயின் கோரைப் பற்களால் தாக்கத்திற்கு உள்ளான 6 அடி உயரப்பாம்பு உயிரிழந்தது. தன் உயிரை பொருட்படுத்தாமல் எஜமானரை காப்பாற்றிய நாயிபண்பு பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


Leave a Reply