திருட வந்த வீட்டில் ஜாலியா ஊஞ்சல் ஆடுறத பாருங்க!

விழுப்புரம் அருகே திருட வந்த நபர் ஊஞ்சலில் அமர்ந்து ஆடி சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பள்ளி ஆசிரியரான இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இதில் அதே பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பாதுகாப்புக்காக தனது வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.

 

தனது சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்த போது அதிர்ச்சியடைந்தார். காரணம் பக்கத்து வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோல் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்ற நபர் இளங்கோ வீட்டின் மொட்டை மாடிக்கு செல்கிறார். அங்கே இருக்கும் மூஞ்சியில் கலைத்து விட்டு செல்கிறார் அந்த காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.


Leave a Reply