உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு புது வீடு! நெகிழ்ச்சியான சம்பவம்

உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு சக ராணுவ வீரர்கள் வீடு கட்டிக்கொடுத்த நெகிழ்ச்சியான ச‌ம்பவம் அசாமில் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராணுவ வீரர் மோகன் சிங். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு அசாமில் நடந்த ராணுவ நடவடிக்கையின் போது வீர மரணமடைந்தார்.

 

அவர் மறைவிக்கு பின்னர் அவரது குடும்பம் வறுமையில் சிக்கியது. தங்க வீடு இல்லாமல், குடிசை வீடு ஒன்றில் மோகன் சிங்கின் மனைவி வசித்தார்.இதையறிந்த சக ராணுவ வீரர்கள் நீண்டகால முயற்சிக்குப் பின்னர் மோகன் சிங்கின் வீடு ஒன்றை கட்டித்தந்துள்ளனர்.

 

அத்துடன் அந்த வீட்டிற்கு சொந்த செலவில் புதுமணை புகுவிழா நடத்திய ராணுவ வீரர்கள், முதல்முறையாக புது வீட்டுக்குச் செல்லும் நண்பரின் மனைவியை தங்களின் கைகள் மீது நடக்க வைத்து அனுப்பினர்.இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்தது.


Leave a Reply