பிக் பாஸ் வீட்டின் புதிய ஹவுஸ்மேட்டாக வந்துள்ள கஸ்தூரிக்கு சில சிறப்பு பவர்களைக் கொடுத்துள்ளார் பிக் பாஸ். அதை வைத்து அவர் சக போட்டியாளர்களை பாடாய் படுத்தி வருகிறார். பிக் பாஸ் வீட்டிற்கு கிப்ட் பாக்ஸ் மூலம் உள்ளே வந்துள்ளார் நடிகை கஸ்தூரி. ஏற்கனவே வெளியில் பிக் பாஸ் போட்டியாளர்களை அவர் கண்டபடி விமர்சித்து வந்தார். தற்போது நேரடியாகவே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், தான் கேட்க நினைக்கும் கேள்விகளை எல்லாம் அவர்களிடம் கேட்டு வருகிறார்.
அதோடு, அவருக்கு சில சிறப்பு பவரையும் பிக் பாஸ் கொடுத்திருக்கிறார். சும்மாவே ஆடுவார் கஸ்தூரி. இதில் சிறப்பு பவர் கிடைத்தால் கேட்கவா வேண்டும்.வீட்டில் உள்ள போட்டியாளர்களை ஒரு வழி படுத்தி எடுத்து விடுகிறார் போல. மூன்றாவது புரொமோவில் அது பற்றிய காட்சிகள் தான் உள்ளது.
முந்தைய புரொமோவில் கஸ்தூரி கேட்ட கேள்விக்கு செம கிண்டலாக பதில் ஒன்றைக் கூறினார் ஷெரீன். கஸ்தூரிக்கு அது சரியான நோஸ்கட்டாகப் போய் விட்டது. அந்த வஞ்சத்தை மனதில் வைத்துக் கொண்டிருக்கிறாரா எனத் தெரியவில்லை, ஷெரீனுக்கு பாத்ரூமில் வைத்து தோப்புக்கரணம் போடும் தண்டனை தருகிறார்.
ஏற்கனவே கஸ்தூரி வருகையால் சாக்ஷிக்குத் தான் பிரச்சினை அதிகம் என்ற பேச்சு உள்ளது. முதல் புரொமோவிலும் கஸ்தூரி சாக்ஷியிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் எனக் கூறுகிறார். இந்த புரொமோவில் பாத்ரூமில் சாக்ஷியை தலைகீழாக நிற்க வைத்து விட்டார். பாவம் வேறு வழியில்லாமல் அவரும் நிற்கிறார்.
இவர்களுக்கே இப்படியென்றால் லாஸ்லியாவுக்கு என்ன தண்டனை கொடுத்திருப்பார் என நினைத்துப் பாருங்கள். காரணம் வெளியில் இருக்கும் போது, லாஸ்லியாவைப் பற்றி நிறைய விமர்சித்திருந்தார் கஸ்தூரி. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவரைப் பிடிக்கும் என்றும், இப்போது மனது மாறி விட்டது என்றும் கூறியிருந்தார்.
அதன்படி பார்த்தால் லாஸ்லியாவுக்கு தண்டனை தருவாரா இல்லை, கூப்பிட்டு அறிவுரை கூறுவாரா என்பது தெரியவில்லை. ஆனால் எப்படியும் சேரனுக்கு எதுவும் தண்டனை தர மாட்டார் என நம்பலாம். காரணம் சேரனுக்கு வெளியில் உள்ள ரசிகர்கள் பற்றி அவருக்குத் தெரியும் அல்லவா. இதேபோல், மற்ற போட்டியாளர்களுக்கும் என்ன தண்டனை தரப்போகிறார் என்ற ஆவல் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.