பெண் குளியலறையில் மர்ம மரணம்

அண்ணாநகரில் வசித்து வரும் கிருஷ்ண பகதூர் என்பவரின் மனைவி பிங்கி, பச்சைகுத்துதல் மற்றும் சேலை விற்பனை போன்ற வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் குளியல் அறையில் பிங்கி வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக அவரது கணவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, வீட்டுக்குள் மர்ம நபர்கள் 2 பேர் வந்து செல்வது கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பதிவாகி இருந்தது.

 

மேலும் அவரது உடலில் காயங்கள் உள்ளன. எனவே பிங்கி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகமடைந்த போலீஸார், அவரது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply