பொள்ளாச்சி அருகே போலி உரக்குடோனுக்கு சீல்.180 போலி உரமூட்டைகள் பறிமுதல்.மாவட்ட நிர்வாகம் அதிரடி

பொள்ளாச்சி அருகே போடிபாளையத்தில் தேவராஜ் என்பவர் விவசாய தோட்டத்தில் இயற்கை உரம் என்ற பெயரில் சட்டவிரோதமாக உரம் தயாரிப்பு.வட்டாச்சியர் தணிகாசலம் தலைமையிலான வருவாய் துறையினர் அதிரடி ஆய்வு.180 போலி உரமூட்டைகள் பறிமுதல்.குடோனுக்கு சீல் வைப்பு.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் இயற்கை உரம் என்ற பெயரில் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக கோட்டாட்சியர் ரவிக்குமாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு விரைந்த வட்டாட்சியர் தணிகாசலம் தலைமையிலான வருவாய்த்துறையினர் விவசாய தோட்டத்தில் இருந்த குடோனை சோதனை நடத்தினர்.

அப்போது,கலப்பட உர மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,கோழி கழிவுகள், கிணற்று மண்,மணல், பொட்டாசியம், யூரியா, சாணம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு இயற்கை உரம் என்ற பெயரில் கலப்படம் செய்து அரசு மற்றும் பிரபல தனியார் உர பைகளை தயாரித்து அதில் கலப்படம் செய்யப்பட்ட உரங்களை நிரப்பி மூட்டை மூட்டையாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

இதனை அடுத்து அங்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த 180 உர மூட்டைகள் பறிமுதல் செய்த வருவாய் துறையினர் குடோனுக்கும் சீல் வைத்தனர்.மேலும், தேவராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.உர மூட்டைகளில் இருந்த மாதிரியை வேளாண்துறை அதிகாரிகளிடம் வருவாய்த்துறையினர் வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து போலி உரம் தயாரித்து விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் என்று தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி அருகே போலி உர குடோனுக்கு சீல் வைத்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 180 போலி உர மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply