“ஹே உன்னை பார்த்தால் புது வெட்கம் வருதே!” சாங் ரிங் டோனாக வலம் வருது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலின் பாடல் புதிய லவ் ஆனந்தமாக வலம் வருகிறது.சில வருடங்களுக்கு முன்பு ஸ்டார், கலர்ஸ்,ஜீ இவற்றின் மொழி பெயர்ப்பு சீரியல்கள் மக்களின் மனதை கொள்ளையடித்தன. தற்போது பிற மொழிகளில் வெற்றி பெற்ற சீரியல்கள் தமிழ் தயாரிப்பில் மக்களை கவர்ந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியல்.

 

இந்த தொடர், ஜீ தெலுங்கின் சூர்ய காந்தம் சீரியலின் ரீமேக் ஆகும்.இந்த தொடரில் டாம் பாய்யாக நடித்துவரும் ஆயிஷா பல இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளார். நாயகன் விஷ்ணு ஆபிஸ் சீரியல் மூலம் நம் அனைவருக்கும் அறிந்தவர்.

 

ஏற்கனவே இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயினை ரவுடி பேபி என அழைப்பதும், ஹீரோயின் ஹீரோவை அமுல் பேபி என அழைப்பதும் ட்ரென்ட்டாகி வந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் பாடலும் ட்ரென்ட்டாகி வருகிறது.”ஹே உன்னை பார்த்தால் புது வெட்கம் வருதே! ஐய்யோ எனக்குள் முதல் அச்சம் வருதே!” என்ற சத்யா சீரியல் பாடல் இப்போது பலரின் மொபைல் மற்றும் வாட்சப் ஸ்டேடஸில் வலம் வருகிறது.


Leave a Reply