உண்மையில் கவின் அப்படி பட்டவர் இல்லை: ரட்சிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள கவின், மிகவும் ஜாலியாக அனைத்து பெண்களுடனும் பழகி வந்ததும், அதனால் அவருக்கு சில நாட்களாக நேர்ந்த பிரச்சனைகள் குறித்தும் அனைவரும் அறிந்தது தான்.
கவின், சினிமாவில் உள்ள ஆர்வம் காரணமாக ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானவர். இந்த சீரியல் அவருக்கு நல்லதொரு தொடக்கத்தை கொடுத்தது. இதை தொடர்ந்து, தாயுமானவன் , சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்தார்.

 

மேலும், பீசா, இன்று நேற்று நாளை, ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது, ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நமீசன் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் ஜாலியாக பழகி வந்தாலும், ஒரு நிலையில் இவரை அனைவரும் தவறாக நினைக்கும் நிலைக்கு சென்று விட்டது.

இதனால் இவரின் உண்மையான குணம் பற்றியும் கவின் எப்படி பட்டவர் என்பது குறித்தும் பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் , சரவணன் மீனாட்சி சீரியல் இவருடன் கதாநாயகியாக நடித்த, நடிகை ரக்ஷிதா கவின் பற்றி கூறுகையில் உண்மையில் கவின் அப்படி பட்டவர் இல்லை. ஷூட்டிங்கில் கூட அவர் வந்து செல்வதே தெரியாது.

 

பிக்பாஸில் நடந்து கொள்வது பார்க்கும் எங்களுக்கே வித்தியாசமாக தான் உள்ளது. அனைவரையும் சந்தோஷமாக வைத்து கொள்ள இப்படி நடிக்கிறார் என்று தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.இவரை தொடர்ந்து ‘ராஜா ராணி’ சீரியலின் இயக்குனர் பிரவீன், கவின் மிகவும் ஜாலியான பையன், சரவணன் மீனாட்சி சீரியலில் கூட இவரை அமைதியாக தான் பார்த்திருக்கிறேன் என தொடர்ந்து நல்ல கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வருகின்றனர். இதனால் இவர் பிக்பாஸ் வீட்டில் நடிக்கிறாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.


Leave a Reply