தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையிட்டதில் மடிக்கணினி மொபைல் போன்கள் சிம்கார்டுகள் டாக்குமென்டுகள் பறிமுதல்

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இராமநாதபுரம் உள்ளிட்ட 14 இடங்களில் சோதனையிட்டதில் மடிக்கணினி மொபைல் போன்கள் சிம்கார்டுகள் டாக்குமென்டுகள் பறிமுதல். தலைநகர் டில்லியில் அன்சார் உல்லா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 16 பேரை கடந்த 15 ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களில்,கீழக்கரை ரபி அகமது.இராமநாதபுரம், முந்த் ஆசீர், பைசல் ஷெரீப்.

 

வாலிநோக்கம் பரூக் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இராமநாதபுரத்தில் முகாமிட்டு நான்கு பேரின் வீடு உள்ளிட்ட 5 இடங்கள், தேனி மாவட்டத்தில் இரண்டு இடம், சென்னை ,நெல்லை,மதுரை, தஞ்சை,நாகை, பெரம்பலுர் , திருவாரூர் மாவட்டங்களில் தலா ஓரிடத்திலும் சோதனையிட்டனர்.

இதில் ஒரு மடிக் கணினி, ஏழு மொபைல் போன்கள், ஐந்து சிம் கார்டுகள், மூன்று மெமரி கார்டுகள், ஒரு கார்ட் டிஸ்க் டிரைவ், இரண்டு பென் டிரைவ், ஒரு இன்டெர்நெட் டாண்க்ள், ஒன்பது டிவிடி மற்றும் ஐம்பது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றை விரைவில் சென்னை தேசிய பலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக தேசிய பலனாய்வு முகமை இன்று (20.7.19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply