ரகசியமாக நடத்தப்பட்ட புதியகல்வி கொள்கை கருத்துக் கேட்ப்பு கூட்டம் முறியடிப்பு

புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் பழைய வர்ணாசர்ம கொள்கையை மீண்டும் கொண்டுவந்து, பெரும்பான்மை மக்களின் கல்வியை பறிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

 

இதையடுத்து பள்ளி,கல்லூரி ஆசிரியர்களுக்கோ,பெற்றோர்களுக்கோ,மாணவர்களுக்கோ எந்தவித பொது அறிவிப்பும் கொடுக்காமல்,இந்த புதிய கல்வி கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என கணக்குக்காட்ட,தமிழக அரசின் சார்பில் கருத்துக்கேட்பு என்ற பெயரில், அவர்களுக்கு ஆதரவான சில ஆசிரியர்களை மட்டும் வைத்து,கோவை பிஎஸ்ஜி டெக்னாலஜி கல்லூரியில் ரகசிய கூட்டத்தை இன்று (17/07/2019) நடத்தி வந்தது.

இதை அறிந்து கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோழர்கள்,பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் நேரடியாக கூட்டம் நடத்தும் இடத்திற்கே சென்று,கூட்டத்தை தடுத்து நிறுத்தியது.இனி இப்படி ஒரு கருத்துக்கணிப்பு கூட்டம் நடத்துவதென்றால்,பள்ளி,கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியும், மக்களுக்கு பத்திரிக்கை,தொலைக்காட்சியில் பொது அறிவிப்பு கொடுத்து மட்டுமே நடத்த வேண்டும் என எச்சரிக்கைக்கப்ட்டது.


Leave a Reply