திருவாடானை அருகே ணற்றில் விழுந்த, தேசிய பறவை மயிலை உயிருடன் மீட்டனர்

Publish by: ஆனந்த் --- Photo :


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவொற்றியூர் அருள்மிகு பாகம்பிரியாள் கோவில் அருகே உள்ள கிணற்றில் இந்திய நாட்டின் தேசிய பறவையான மயில் கிணற்றில் விழுந்து இதை அறிந்த கிராம மக்கள் திருவானைக்காவல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வந்து கிணற்றில் விழுந்த தேசிய பறவை மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்


Leave a Reply