பள்ளிக்கு செல்வதற்காக நாயிடம் கெஞ்சி கூத்தாடிய சிறுவன்

Publish by: --- Photo :


இங்கிலாந்தில் பள்ளிக்கு செல்லும் சிறுவனை அவன் வளர்த்த நாய் போகவிடாமல் மல்லு கட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டனை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒரு நாயை வளர்த்து வருகிறான். நீண்ட விடுமுறையில் இருந்த சிறுவன் குட்டி நாயுடன் அதிக நேரம் பொழுதை கழித்துள்ளான். பின்னர் விடுமுறை முடிந்து பள்ளிக்கு புறப்பட்ட சிறுவனின் காலை கட்டிக்கொண்டு போகவிடாமல் தடுத்தது அந்த நாய் குட்டி. அதையும் மீறி அந்த சிறுவன் நடந்து செல்ல முயன்ற போது அப்போதும் தடுத்த நாயிடம் சிறுவன் கெஞ்சிக்கொண்டே செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.