ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக படகு மூலம் அகதிகள் நுழைவதற்கு தடை

Publish by: --- Photo :


ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக படகு மூலம் அகதிகள் நுழைவதற்கான தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என அந்நாட்டு அரசு திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசு பதவி ஏற்றுள்ளது.

 

அரசு பொறுப்பேற்றதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட இடைத்தரகர்கள் சிலர் அகதிகள் படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக நுழைய ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறினர். இந்த நிலையில் அகதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரத்தை 10 நாடுகளை ஆஸ்திரேலிய அரசு முன்னெடுத்து உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் ஆஸ்திரேலிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் பிராந்திய இயக்குனரான டாரா கவனா இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

 

அப்போது பேசிய அவர் படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்ற 847 பேரை அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். யாரானாலும் உரிய ஆவணங்கள் இன்றி ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்டால் அவர்கள் மீண்டும் பாதுகாப்பாக அவர்களின் சொந்த நாடுகளுக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.


Leave a Reply