ஜூலை14 ஆம் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தேர்தல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தேர்தல் வரும் ஜூலை14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் நாதன் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,இயக்குனர்கள் சங்கம் பொதுக் குழுவில் அச்சங்கத்தின் தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தலைவர் பதவி நீங்கலாக, துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், இணை செயலாளர்கள், பொருளாளர்கள்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் 27 ஆம் தேதிமுதல் 2 நாட்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும்,ஜூலை 3 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் அதிகாரி நீதிபதி செந்தில் நாதன் அறிவித்துள்ளார். மேலும் ஜூலை 14 ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க அரங்கில் வாக்கு பதிவு நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply