ரயிலில் தலா 100 ரூபாய்க்கு மசாஜ் சேவை

ரயில் பயணிகளுக்கு மசாஜ் சேவையை அளிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேற்கு மண்டலத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் 39 ரயில்களில் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதங்கள் மற்றும் தலை மசாஜ் செய்ய தலா. 100 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் வரவேற்பை பெற்றால் பிற மண்டலங்களிலும் அமலுக்கு வரும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


Leave a Reply