ஸ்ரீ ஜகத் ஜனனி அம்மன் கோவில் பால்குட திருவிழா கோலாகலம்!

திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் உள்ள ஜனனிஅம்மன் கோவில் பால்குட திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

 

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தி்ல் ஸ்ரீ ஜகத்ஜனனி அம்மன் கோவிலில், சித்திரை திருவிழா உற்சவம், கடந்த மே 12இல், காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

 

இத்திருவிழாவின் கடைசி நாளான இன்று, பக்தர்கள் விரமிருந்து, பால்குடம் ஏந்தியவாறு, அஞ்சுகோட்டை கருப்பர் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர், ஜகத் ஜனனி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

 

அதை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பால் குட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு அருள்பெற்றுச் சென்றனர்.


Leave a Reply