`மொக்க ப்ளேயர்… டக்கு பௌலர்…’! ட்ரெண்டிங் ஆகும் சி.எஸ்.கே.வின் தமிழ் ராப் சாங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பாடிய தமிழ் ராப் பாடலின் வீடியோ, வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கும், தமிழக மண்ணுக்கும் எப்போதுமே ஒரு நெருக்கமான பந்தம் உள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழக ரசிகர்கள் சென்னை அணியில் கேப்டன் தோனியை ‘தல’ என்று அழைத்து ஆர்ப்பரிக்கிறார்கள்.

 

 

ஹர்பஜன் சிங்கை எடுத்து கொண்டால், முக்கால்வாசி தமிழராகவே மாறிவிட்டார். பந்து சுழற்றவும் தெரியும், கம்பு சுத்தவும் தெரியும் என்று ஹர்பஜன் சிங், தமிழில் டிவிட் செய்வதில் தொடங்கி, ரஜினி புகழ் பாடுவது, தமிழக பாரம்பரிய உடையணிந்து கலக்குவது என்று சி.எஸ்.கே. வீரர்களின் லூட்டிக்கு அளவே இல்லை.

 

 

இந்த நிலையில் சி.எஸ்.கே. வீரர்கள் தமிழில் பாடியுள்ள ராப் பாடலின் வீடியோ காட்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. டொக்கு வச்சா மொக்க ப்ளேயர்… டக்கு பௌலருக்கு மொக்க ஓவர்… என்று இந்த ராப் பாடல் தொடங்குகிறது.

 

சி.எஸ்.கே. வீரர்கள் டுப்ளிஸிஸ், வாட்சன், தாஹிர், ரெய்னா, பிராவோ, ஹர்பஜன் உள்ளிட்டவர்கள் இதை பாடியுள்ளனர். இந்த பாடல் சமூக வலைதளங்களில் பரவி, டிரெண்டிங் ஆகி வருகிறது.


Leave a Reply