ஐயோ, உள்ளாட்சி தேர்தலா? அலறும் தமிழக அரசு! உச்ச நீதிமன்றத்தில் 3 மாத அவகாசம் கேட்பு

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து தமிழக தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்; தேர்தல் அறிவிப்புகளை வெளியிட 3 மாத அவகாசம் வேண்டும் என்று, உச்ச நீதிமன்றதில் தமிழக அரசு கேட்டுள்ளது.

 

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி மதுரையைசேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், 2018 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

 

இவ்வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியலை, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற முடியவில்லை என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே தான் உள்ளாட்சித் தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் உள்ளது.

 

மேலும் உள்ளாட்சிப் பணிகளை மக்கள் நல பணியாளர்கள் கவனித்து வருகிறார்கள். அதனால் எந்தவொரு பணியும் பாதிப்படையவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால், தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று, தமிழக அரசு தெரிவித்தது.


Leave a Reply