டெல்லியை சுருட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ்! வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய தோனி

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.ஏல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், 80 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 50ஆவது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர் கொண்டது.

 

டாஸ் வென்ற டெல்லி அணி, பந்து வீசியது. அதன்படி சென்னை அணியில் டூ பிளஸ்சிஸ், ஷேன் வாட்சன் தொடக்க வீரரகளாக களமிறங்கினர். வாட்சன் 0 (9) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, டூ பிளஸ்சியுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.

 

டூ பிளஸ்சிஸ் 39( 41), சுரேஷ் ரெய்னா 59(37), ஜடேஜா 25( 10) ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44(22) ரன்களுடன் களத்தில் இருந்தார். சென்னை அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

 

கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, சென்னை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது. பிரித்வி ஷா 4(5), ஷிகார் தவான் 19(13), ரிஷாப் பாண்ட் 5(3), இங்கிராம் 1(5), அக்‌ஷர் படேல் 9( 9) , ரூதர் போர்டு 2(4) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.

 

முடிவில் டெல்லி அணி 16.2 ஒவர்கள் முடிவில், 99 ரன்களுக்கு டெல்லி அணி ஆட்டமிழந்தது. சென்னை தரப்பில், இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகள், ஜடேஜா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அசத்தல் வெற்றிபெற்றது.

 

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடத்திற்கு முன்னேறியது. போட்டி முடிந்த பிறகு மைதானத்தை சக வீரர்களுடன் வலம் வந்த தோனி, ரசிகர்களுக்கு பந்துகளை தூக்கி வீசி பரிசளித்து, வெற்றியை வித்தியாசமாக கொண்டாடினார்.


Leave a Reply