தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து, இலங்கை ராணுவ தளபதிகள், பாதுகாப்பு துறை தலைவர்களை மாற்றியமைக்க அதிபர் சிரிசேனா முடிவு செய்துள்ளார்.
அண்டை நாடான இலங்கையில், கடந்த 21ஆம் தேதி அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 350க்கும் மேற்பட்டோர் இறந்தனர்; 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் 10 இந்தியார்கள் உட்பட 34 வெளி நாட்டவர்கள் அடங்குவர்.
தினமும் ஒரு இடத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு வருவதால், அங்கு இன்னமும் பதற்றம் நீடிக்கிறது. இன்றும் கூட, கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் வெடிகுண்டு வெடித்தது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை.
இந்த நிலையில் இலங்கை ராணுவத்தளபதிகள், பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பிரிவு முற்றிலும் சீரமைக்க அதிபர் மைத்ரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் தகவல்களை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை. தகவல் கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பேன். பாதுகாப்பு துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றார்.