சாமியாராக போய்விட வேண்டும் என நினைத்தேன்! ரகசியத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி

சாமியாராக வேண்டும் என்று தான் நினைத்தேன்; ஆனால், பிரதமராவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை என்று, நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் சிறப்பு பேட்டி கண்டார். இந்த பேட்டியின் போது பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சுவாரசிய விஷயங்கள், அரசியல் அல்லாத தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

 

பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது: எனக்குள்ளும் கோபம் இருக்கிறது. ஆனால, அதை நான் ஒருபோதும் வெளிக்காட்ட விரும்பியதில்லை. எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பு வரை எனக்கு வங்கி கணக்கு என்பதே இல்லை.

 

நான் சாமியாராக போக வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன்; ஆனால், கனவிலும் கூட பிரதமராக வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது கிடையாது. சிறுவயதிலேயே நான் எனது தாயை விட்டு பிரிந்து வந்து விட்டேன். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

 

வரலாறு போற்றும் தலைவர்களின் சுயசரிதைகளை படிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. எதிர்க்கட்சிகளில் குலாம் நபி ஆஸாத் போன்ற பல நண்பர்கள் எனக்கு உள்ளனர். எனக்கு குர்தா அனுப்புவதை இன்றளவும் மம்தா பானர்ஜி வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வாறு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.


Leave a Reply