முன்னாள் முதல்வரின் மகன் திட்டமிட்டு கொலை! மருமகளை அதிரடியாக கைது செய்த போலீஸ்

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி. திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

உத்தரபிரதேசம் மாநில முதலமைச்சராக இருந்தவர் , காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்.டி.திவாரி. இவரது மகன் ரோகித் சேகர் திவாரி, கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் உள்ள வீட்டில் மது போதையில் இருந்துள்ளார்.

 

அடுத்த நாள், ரோகித்தின் தாய் உஜ்வாலா திவாரிக்கு, கடந்த 16 ஆம் தேதி வந்த தொலைபேசி அழைப்பில், மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ரோகித் மயங்கி கிடப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர், ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனையில் ரோகித்தை சேர்த்தார். ஆனால், ரோகித்தை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

 

ரோகித் சேகர் திவாரியின் உடல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், ரோகித் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும் மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்தது.

 

இவ்வழக்கை, கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரித்து வந்தனர். ரோகித் சேகர் திவாரியின் வீட்டுக்கு சென்ற போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். மேலும், ரோகித் திவாரியின் மனைவி, உறவினர் மற்றும் வேலைக்காரப் பெண்ணிடம் தனித்தனியாக துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

 

இதில் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி, அவரது மனைவி அபூர்வா கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

 

உத்தரப்பிரதேச மூத்த தலைவராக இருந்த காலஞ்சென்ற என்.டி.திவாரியின் மகனை, அவரது மனைவியே கொன்றிருப்பது, அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply