சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி இன்று மனுதாக்கல் செய்தார். 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர்களை அதிமுக, திமுக மற்றும் அமமுக கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன.
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் திமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதற்கிடையே, இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை நாம் தமிழர் கட்சி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, திருப்பரங்குன்றம் – இரா.ரேவதி, அரவக்குறிச்சி – பா.க. செல்வம், ஓட்டப்பிடாரம் – மு.அகல்யா, சூலூர் – விஜயராகவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.