இலஞ்சி குமார கோவில் வள்ளி யானை  உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள இலஞ்சியில் அமைந்துள்ள திருஇலஞ்சி குமாரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுமார் 2006 ம் ஆண்டு கடம்பூர் ஜமீந்தார் 2 யானைகளை கோவிலுக்கு அளித்தார் . அப்போது வள்ளி ,தெய்வயானை என்ற பெயருடன் இரு யானைகள் வளர்க்கப்பட்ட நிலையில் 2008 ம் ஆண்டில் தெய்வயானை என்ற யானை பராமரிப்பு குறைபாடுகாரணமாக இறந்தது.

 18 வது வயதில் உயிரிழந்த வள்ளி யானை
18 வது வயதில் உயிரிழந்த வள்ளி யானை

இந்த நிலையில் ஏற்கனவே வள்ளி என்ற யானை பராமரிப்பு சரி இல்லாமல் இருந்ததாக வனத்துறை  மெமோ அளித்து வந்த நிலையில் யானைக்கு நீர் கட்டி இருந்ததாகவும் சரியான பராமரிப்பு இல்லாத நிலையில் நேற்று இந்த யானைக்கு மருந்து அளித்ததாக கூறப்படுகிறது. நடைபயிற்சி கூட்டி சென்ற போது கோவில் வெளிப்பிரகாரத்தில் மயங்கி விழுந்தது.   கால் நடை மருத்துவர்  வந்து பரிசோதித்ததில் யானை இறந்தது உறுதி செய்யப்பட்டது. 

 

தற்போது குற்றால வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 13 வயதில்  யானை இறந்த நிலையில், தற்போது  இரண்டாவது யானை 18 வது வயதில் உயிரிழந்துள்ளது  பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply