வைரலாகி வரும் ரஜினியின் ‘தர்பார்’ ஸ்டில்ஸ்! இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி

நடிகர் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படங்கள் வெளிவந்திருப்பது, படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கடந்த 10ஆம் தேதி, இப்படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.
இணையதளத்தில் வெளியாகியுள்ள ரஜினியின் தர்பார் படப்பிடிப்பு காட்சிகள்
இந்த நிலையில், ரகசியம் காக்கப்பட்டு வந்த தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. ரஜினியுடன் நயன்தாரா இருப்பது போன்ற காட்சிகள், யோகிபாபுடன் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
ரஜினி நடித்து வரும் தர்பார் படப்பிடிப்பின் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பு தொடர்பான காட்சிகள் ரகசியம் காக்கப்பட்டு வந்த நிலையில், அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Leave a Reply